குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் நடத்தும் கையெழுத்து:-பழனி சட்ட மன்ற உறுப்பினர் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.!

தேடிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமைக்கட்சிகள் நடத்தும் கையெழுத்து இயக்கத்தை திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான செந்தில்குமார் துவக்கி வைத்து வியாபாரிகளிடம் கையெழுத்து வாங்கினார்.

மத்திய அரசு கொண்டுவந்த தேசிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கு கூறி தமிழகத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் இணைந்து தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக இன்று திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் தலைமையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தோழமை கட்சி பொறுப்பாளர்களுடன் கடைவீதி, பூ மார்க்கெட், காய்கறி மார்க்கெட் மற்றும் பஸ் நிலையம் என பல பகுதிகளில் ஒவ்வொருவரிடமும் நேரடியாக சென்று துண்டு பிரசுரம் கொடுத்துத்து அவர்களிடம் விளக்கி கூறி கையெழுத்து வாங்கினார் மாவட்ட துணைச் செயலார் நாகராஜன் அனைத்து தோழமை கட்சியினரையும் ஒருங்கிணைத்தார் இதில் நிலக்கோட்டை பேரூர் கலகச் செயலாளர் ஜோசப் வரவேற்றார் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், தெற்கு ஒன்றியச் செயலாளர் மாயாண்டி, மணிகண்டன், கரிகாலப்பாண்டியன் பள்ளபட்டி வெள்ளிமலை, மற்றும் மதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தை கட்சி போன்ற தோழமைக் கட்சிகளின் பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்…

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image