நிலக்கோட்டையில் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தபட்ட “விபத்தில்லா நிலக்கோட்டை ” மாரத்தான் போட்டியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.!

நிலக்கோட்டையில் ரோட்டரி சங்கம் சார்பில் நடத்தபட்ட “விபத்தில்லா நிலக்கோட்டை ” மாரத்தான் போட்டியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் கோல்டன் ரோட்டரி சங்கம் சார்பில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு “விபத்தில்லா நிலக்கோட்டை ” என்ற விபத்துக்கள் ஏற்படுத்தா வண்ணம் பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மாணவிகளுக்கு தனியாகவும் மாணவர்களுக்குத் தனியாகவும் தனித்தனியே விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியானது மதுரை ரோடு எஸ்.எல் மஹாலில் துவங்கி பஸ்நிலையம், நான்குரோடு சந்திப்பு, கடைவீதி, மாரியம்மன் கோவில் வழியாக தோப்புப்பட்டி வரை சென்று மீண்டும் அதே சாலையில் SL – மஹால் வந்து சேர்ந்தனர் இந்த போட்டியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் போட்டியில் கலந்து கொண்ட முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பீரோ, மின்விசிறி போன்ற பரிசுபொருட்கள் வழங்கி சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் இப்போட்டியில் 4 வயது சிறுவன் விக்னேஷ் என்பவன் கலந்து கொண்டு போட்டி தூரம் 14 கிலோ மீட்டர் தூரத்தை முழுமையாக ஓடி முடித்து பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியது, போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் டீசர்ட்டுகள் வழங்கி நோட்டரி சங்கம் சார்பில் பாராட்டினர்…

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image