மத்திய நிதியமைச்சர் ஆற்றிய உரை பட்ஜெட் வரலாற்றில் நெடிய உரையாக அமைந்திருந்தாலும், எல்லாமே வெற்றுதான் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.!

மத்திய நிதியமைச்சர் ஆற்றிய உரை பட்ஜெட் வரலாற்றில் நெடிய உரையாக அமைந்திருந்தாலும், எல்லாமே வெற்றுதான் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.!

பாராளுமன்றத்தில் நடப்பு (2020-2021) நிதியாண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டு சுமார் இரண்டரை மணி நேரம் உரையாற்றினார்.

இந்நிலையில், இந்த நிதிநிலை அறிக்கை தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

‘வேலை வாய்ப்பின்மை என்பது நாடு எதிர்நோக்கியுள்ள அதிமுக்கிய பிரச்சனையாக உள்ளது. இதை தீர்ப்பதற்கும் நமது இளைஞர்கள் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் இந்த பட்ஜெட்டில் எவ்வித ஆக்கப்பூர்வமான யோசனைகளையும் நான் பார்க்கவில்லை.

பட்ஜெட்டில் உள்ள அனைத்தும் அரசின் மனப்பாங்கை விவரிக்கின்றது. எல்லாமே வெறும் பேச்சுதான். ஆனால், எதுவுமே நடப்பதில்லை. நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து மத்திய நிதி மந்திரி ஆற்றிய உரை பட்ஜெட் வரலாற்றில் மிக நீண்ட, நெடிய உரையாக அமைந்திருந்தாலும் எல்லாமே வெற்றுதான்’ என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..