Home செய்திகள் ஆயிரத்து முந்நூறு கிலோமீட்ர் தொலைவில் சென்று சாதித்த புத்தனா ம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி மாணவ மாணவிகள்.

ஆயிரத்து முந்நூறு கிலோமீட்ர் தொலைவில் சென்று சாதித்த புத்தனா ம்பட்டி, நேரு நினைவுக் கல்லூரி மாணவ மாணவிகள்.

by mohan

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், விஜயநகரம் அருகில் இராஜம் என்ற இடத்தில் உள்ள ஜீ எம் ஆர் (GMR) தொழில்நுட்ப நிறுவனம் 14வது இந்திய அளவிலான அளவில் மூன்று நாள் (ஜனவரி-31 முதல் பிப்ரவரி-2வரை) STEPCONE 2020 என்ற மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரும் கருத்தரங்கை நடத்தியது.இக்கருத்தரங்கை சந்திராயன்-1 மற்றும் மங்கல்யான் திட்ட இயக்குனரும், இஸ்ரோ புகழ்பெற்ற விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப நிறுவன துணை தலைவர் பத்ம ஸ்ரீ டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை தொடங்கி வைத்தார். அவர் கூறுகையில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நான்கு வருடங்களுக்கு ஒரு இராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் செலுத்திய இஸ்ரோ இப்போது நான்கு வாரங்களுக்கு ஒரு இராக்கேட் மற்றும் செயற்கைக்கோளை செலுத்தி விண்வெளித் துறையில் இஸ்ரோ உலகில் முதன்மையாகத் திகழ்கிறது. இன்னும் பத்து ஆண்டுகளில் தரைவழி, கடல்வழி, வான்வழி பயணத்தை போல் விண்வெளிப் பயணம் மூலம் சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல இருக்கிறோம். இஸ்ரோ சந்திராயன்-1 மூலம் நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடித்த பிறகு தான் உலக நாடுகளின் கவனம் நிலாவின் பக்கம் திரும்பி உள்ளதா பேசினார்.இந்த கருத்தரங்கில் இந்தியா முழுவதும் இருந்து அறுநூறுக்கும் மேற்பட்ட கண்டுபிடிப்பு மற்றும் படைப்புகளை மாணவர்கள் எடுத்துரைத்தனர். மேலும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட அறிவியல் அறிஞர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பங்கு பெற்றனர்.இதில் அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தல், விளக்க கருத்தரங்கம், அறிவியல் கண்காட்சி, அறிவியல் ஐடியா, தொழில்நுட்ப கருத்தரங்கம், ரோபோ தொழில்நுட்ப கருத்தரங்கம் ஆகியவை நடைபெற்றது.

இதில் புத்தனாம்பட்டி நேருநினைவுக் கல்லூரியை சார்ந்த கு.ஜுவிதா இயந்திரங்களில் வீணாகும் வெப்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையும், வீ.அகிலா பகலில் உற்பத்தியாகும் சூரிய மின்னாற்றலை ஹைட்ராலிக் அழுத்தம் மூலம் சேமித்து மீண்டும் உபயோகிக்கும் முறையையும், ச.கற்பகம் பார்வையற்றோர் உணரும் தொடு உணர்வு கருவியை செயல்படும் விதம் குறித்தும், சு.முரளி கடல் நீரை பயன்படுத்தி ஆக்ஸிஹைட்ரஜன் மூலம் வாகனங்களை இயக்கும் முறையையும் மற்றும் ப.கோபிநாத் பாதுகாப்பான முறையில் தகவல் தொழில்நுட்பத்தை பரிமாறும் லாரன்ஸ் கையாட்டிக் அமைப்பு முறையையும் விளக்கி கூறினார்.முன்னதாக இந்த கருத்தரங்கத்திற்கு தேவையான நிதி உதவியை தலைவர் பொன்.பாலசுப்ரமணியன், செயலர் பொன்.இரவிச்சந்திரன், முதல்வர் பொன் பெரியசாமி ஆகியோர் செய்து வழியனுப்பி வைத்தார்.இதற்கு தேவையான வழிகாட்டுதல்களைmஇயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் N.P.இரமேஷ் செய்தனர்.

செய்தி : N.P.இரமேஷ், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!