குடியுரிமை பாதுகாப்பு கோரி எஸ்டிபிஐ., கட்சி சார்பில் மண்டபத்தில் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை பாதுகாப்பு கோரி மண்டபம் நகர் சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர் தலைவர் முகமது ஏ.சுலைமான் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயற்குழு உறுப்பினர் எஸ்.அபுலா (எ) ஷேக் அப்துல்லா. வரவேற்றார். எஸ்டிபிஐ., மாவட்ட தலைவர் எம்.ஐ. நூர் ஜியாவுதீன், சட்டமன்ற தொகுதி தலைவர் எஸ்.அசனலி , திமுக நகர் செயலாளர் டி.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலர எஸ்.அஹமது நவவி, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாநில செயலர் இத்ரீஸ் , தமிழ் புலிகள் அமைப்பு மாவட்ட செயலாளர் மு.தமிழ் முருகன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார். மண்டபம் நகர் துணைத்தலைவர் எஸ்.அப்துல் ரஹ்மான் நன்றி கூறினார்.குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு சட்டங்களுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.
ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர்கள் மகேஷ், ஆல்ட்ரின் (நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு) ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..