தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற பதாகைகளை பார்க்கிறோமே… உணர்கிறோமா???உயிரை இழந்த பின் பழி மற்றவர் மீது என்பது சரியா?

தீதும், நன்றும், பிறர் தர வாரா.!

இது எந்த அளவிற்கு உண்மை என பார்ப்போம் வாருங்கள்.!

நம்மை நேசிக்கும் நாமே
நமக்கு விரோதியாகிறோமே
எப்படி?

நம் உடலை நாம் அவ்வளவு பராமரிக்கிறோமே!

பராமரிக்கும் நாம் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தால்
வாகனம் ஓட்டும் போது கவனமாக இருந்திருப்போமே.!

வாகனத்திற்கு வேகம் கூட்டுவது நாம் ஆனால்,ஏதும் நம் உயிருக்கோ நம் உடல் உறுப்புகளுக்கோ பாதிப்புகள் வந்தால் பழி வேறு ஒருவர் மீதும், பாதிப்புகள் நம் குடும்பம் மீதல்லவா ஏற்படுத்தி விடுகிறது.!

தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற பதாகைகளை பார்க்கிறோமே… உணர்கிறோமா???
உயிரை இழந்த பின் பழி மற்றவர் மீது என்பது சரியா?

தீதும், நன்றும், பிறர் தர வாரா.!

உயிரினை துச்சமாக நினைத்து வாகனம் ஓட்டுவது, காற்றோடு போட்டி போட்டு வாகனம் ஓட்டி காற்றாய் கரைந்து
தன் பெற்றோர்களின் கனவினையும் காற்றோடு காற்றாய் கரைய விட்டு மீளா துன்பத்தில் ஆழ்த்துகிறோமே நியாயமா?

தீதும், நன்றும், பிறர் தர வாரா.!

குடிபோதையில் வாகனம் ஓட்டி நம் நன்மைக்காக நிற்கும் காவலருக்கும் மதிப்பளிக்காமல் அவர் நிறுத்துவதையும் கண்டுகொள்ளாமல் இறுமாப்புடன் தாண்டிச்சென்று தனக்குத்தானே
கொள்ளி வைத்துக்கொள்கிறோமே.

வெற்றுப் பெருமைக்காக தங்கள் குழந்தைகளிடம் விளையாட்டுப்பொருளை கொடுப்பதைப் போல் இரு சக்கர வாகனத்தை கொடுத்து அவனை அவ்வாகனத்தை ஓட்ட சொல்லி ரசிப்பதின் விளைவு விபரீதமாகும் என உணர்வோமா பெற்றோர்களாகிய நாம்???

தீதும், நன்றும், பிறர் தர வாரா.!

போக்குவரத்து விதிகளையேனும் மதிக்கிறோமா நாம்? எல்லா போக்குவரத்து விதிகளையும் செருக்குடன் தாண்டிச் சென்று நமக்கு நாமே குழி தோண்டிக்கொண்டு அதில் நாமே புதைகிறோமே..

தீதும், நன்றும், பிறர் தர வாரா.!

சாலை விதிகளையும் நமக்காக சேவை செய்யும் போக்குவரத்து காவலர்களையும் மதிப்போம்:- தலைக்கவசம் அணிந்து
நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வோம்.!

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image