பாரம்பரியமான அரசு மகப்பேறு மருத்துவமனையினை இடமாற்றம் செய்ததை கண்டித்து பெண்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் கூட்டுறவுத்துறை அமைச்சர் சமரச பேச்சுவார்த்தை

மதுரை பழங்காநத்தம் பகுதியில் கடந்த 70 வருடங்களாக செயல்பட்டு வரும் மதுரை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரையில் பைக்கார பகுதிக்கு இட மாற்றம் செய்தனர். இந்த நிலையில் கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக ஒரே பகுதியில் இயங்கி வரும் பாரம்பரியமான அரசு சுகாதார மகப்பேறு மருத்துவமனை இடமாற்றம் செய்வதை கண்டித்து பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சுப்பிரமணியபுரம் போலீசார் விரைந்து வந்தனர். இந்த பழங்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆனதே மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது எனவே கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு அவர்களின் உத்தரவு பெயரில் இடமாற்றம் செய்யப்பட்ட மருத்துவமனை இதே பகுதியில் தொடர்ந்து இயங்கும் என்றும் அரசு அலுவலர்கள் மதுரை மாநகராட்சி ஆணையாளர் விசாகன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களோடு சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதனைத்தொடர்ந்து அமைச்சரின் வாய்மொழி உத்தரவை ஏற்றுக்கொண்ட அந்த பகுதி மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர் மருத்துவமனையை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் செய்ததால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image