Home செய்திகள் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற குடியரசுத்தினவிழா, தேசிய கொடியேற்று விழா, மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கிராம சபை கூட்டம், கூட்டத்தில் பல்வேறு  தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டது.!

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற குடியரசுத்தினவிழா, தேசிய கொடியேற்று விழா, மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கிராம சபை கூட்டம், கூட்டத்தில் பல்வேறு  தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டது.!

by Askar

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற குடியரசுத்தினவிழா, தேசிய கொடியேற்று விழா, மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கிராம சபை கூட்டம், கூட்டத்தில் பல்வேறு  தீர்மானங்கள், நிறைவேற்றப்பட்டது.!

இந்தியா முழுவதும் 70-வது குடியரசு தின விழா கொண்டாடப்படுவதையொட்டி திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் யூஜின் தேசிய கொடியை ஏற்றினர் நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் ரெஜினா நாயகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் துணைத்தலைவர் யாகப்பன் முன்னிலை வகித்தார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணவதி வரவேற்றார் லாரன்ஸ் நன்றி கூறினார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அனைத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்களும் கலந்து கொண்டனர்

நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கோட்டூர் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் சுகந்தா தேசிய கொடியேற்றி வைத்து அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார் ஊராட்சி செயலாளர் பாண்டியராஜன் வரவேற்றார் வட்டார வளர்ச்சி அலுவலர் குணவதி சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டார். ஜம்புதுரைக்கோட்டை ஊராட்சியில் தலைவர் பவுன் தாய் கொடியேற்றி அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு தலைமை வகித்தார் ஊராட்சி செயலாளர் சிவராமன் வரவேற்றார் சிறப்பு பார்வையாளராக ஊராட்சி ஒன்றிய உதவியாளர் பாக்கியலட்சுமி கலந்து கொண்டார் குல்லலகுண்டு ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டம் தலைவர் தலைமையில் நடைபெற்றது ஊராட்சி செயலாளர் முத்துப்பாண்டி வரவேற்றார் சிறப்பு பார்வையாளராக ஊராட்சி ஒன்றிய உதவியாளர் காஞ்சனா கலந்து கொண்டார் மாலையகவுண்டன் பட்டியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் மாயாக்காள் தலைமை தாங்கினார் துணைத் தலைவர் மாலன் வரவேற்றார் ஊராட்சி செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார் சிறப்பு மேற்பார்வையாளராக ஊராட்சி உதவியாளர் நாச்சியப்பன் கலந்து கொண்டார்

மேலும் பள்ளப்பட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர் நாகேந்திரன் தலைமை தாங்கினார் ஊராட்சி செயலாளர் பொன்னுச்சாமி வரவேற்றார் சிறப்பு மேற்பார்வையாளராக வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மேற்பார்வையாளர் திருமுருகன் கலந்து கொண்டார் பச்சம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திற்கு தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கினார் ஊராட்சி செயலாளர் கணேசன் வரவேற்றார் வட்டார வளர்ச்சி அலுவலர் லாரன்ஸ் சிறப்பு மேற்பார்வையாளர் கலந்து கொண்டார்

மேலும் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் எதிர்வரும் கோடை காலத்தை சமாளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தீவிரமாக கொசு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் எனவும் கடந்த நான்கு மாதங்களாக 100 நாள் (NRGS) வேலைத் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை தொடர்ந்து அனைவருக்கும் சரியான ஊதியம் கிடைப்பதில்லை எனவும் புகார் உள்ளதால் அவர்களுக்கு விரைவில் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனைத்து ஊராட்சிகளிலும் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!