Home செய்திகள் பெரம்பலூரில் சிறப்பாக நடைபெற்ற கிராமசபை கூட்டம்-பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.!

பெரம்பலூரில் சிறப்பாக நடைபெற்ற கிராமசபை கூட்டம்-பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.!

by Askar

பெரம்பலூரில் சிறப்பாக நடைபெற்ற கிராமசபை கூட்டம்-பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு.!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியம் பெரிய வெண்மணி பஞ்சாயத்தில் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு ஜன.26 குடியரசு தின விழாவை தொடர்ந்து காலை 11 – 30 மணி அளவில் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிதம்பரம் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் வீரபாண்டியன் பாலிதீன் பைகளின் தீமையை பற்றியும் துணி பயிர்களின் நன்மை பற்றியும் எடுத்துரைத்து , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு துணிப்பைகளை கொடுத்து துணிப்பைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர் மருதாயி பெரியசாமி ஒன்றிய கவுன்சிலர் விஜயா ராஜாங்கம் மற்றும் துணைத் தலைவர் கந்தசாமி , வார்டு உறுப்பினர்கள் அனைவருக்கும் கிராம மக்கள் சார்பாகவும்,சமூக ஆர்வலர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துக் கொண்டனர்.

பஞ்சாயத்து தலைவர் மருதாயி பெரியசாமி அவர்கள் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் இளைஞர்கள் ஆர்வதாதுடன் பங்கேற்றனர். பஞ்சாயத்து செயலாளர் தீர்மானங்களை முழுமையாக வாசித்தார்.

கடந்த கிராம சபையில் இருந்து தற்போது நடக்கின்ற கிராம சபை வரை செலவு செய்யப்பட்ட செலவுகள் குறித்து வாசித்து காட்டினார்.

இக்கிராமத்தின் வளர்ச்சி பணி குறித்து கலந்துகொண்டு சமூக ஆர்வலர் வெண்மணி வரதராஜன் எடுத்துரைத்தார்.

கிராம மக்களால், இளைஞர்களால் பல முக்கியமான தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. கண்ணாமத்து ஏரி தூர் வார வேண்டும் .

2. பாலிதீன் பைகளை பயன்படுத்தக் கூடாது என்று துணிப்பைகளை பயன்படுத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் ஏற்றப்பட்டது .

3. சின்ன வெண்மணியில் செயல்படாமல் இருக்கும் மகளிர் பொது கழிவறை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் .

4. அனைத்து கிராமங்களுக்கும் மகளிர் பொதுக கழிவறை கட்டிக் கொடுக்கப்பட வேண்டும் .

5. வெண்மணி குன்னம் இடையே தார் சாலை அமைக்கப்பட வேண்டும் .

6. ஏரி குளம் குட்டைகளை தூர்வார வேண்டும் .

7. அங்கன்வாடி பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்கப்பட வேண்டும் .

8. கால்நடை மருத்துவமனை கொண்டு வரப்பட வேண்டும் .

9. புதிதாக ரேஷன் கடை கட்டப்பட வேண்டும் .

10. தெருக்களுக்கு சிமெண்ட் சாலை அல்லது தார் சாலை அமைக்கப்பட வேண்டும் .

11 . கழிவுநீர் தேங்காமல் இருக்க சாக்கடை வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் .

12. அரியலூரில் இருந்து வெண்மணி கிராமம் ஊர் வழியாக திட்டக்குடி ஒரு பேருந்தும் , திட்டக்குடியில் இருந்து வெண்மணி கிராமம் ஊர் வழியாக ஒரு பேருந்தும் இதுநாள் வரை இயங்கிவந்தது . கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த பேருந்து செயல்படவில்லை அவற்றை மீண்டும் கொண்டுவரப்பட வேண்டும் என்று தீர்மானம் .

13. உடையான் சாலையில் மக்களுக்கு பயன்படாமல் வெட்டப்பட்ட பள்ளத்தை மூட வேண்டும் .

14. உடையான் சாலையில் இயங்கிவரும் செங்கல் சூளை மூட வேண்டும் .

15. அனைத்துத் துறைகளிலும் குப்பத்தொட்டி வைக்கப்பட வேண்டும் .

16. நூலக வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் .

17. பஞ்சாயத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் செயல்படாமல் இருக்கும் சின்டெக்ஸ் டேங்க் குடிநீர் தொட்டியை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட வேண்டும் .

18. சின்ன வெண்மணி காலனி சுடுகாட்டுக்கு தண்ணீர் தொட்டி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் .

19. ரேஷன் கடைகளில் அனைவருக்கும் அனைத்து பொருள்களும் சரியான எடையில் தரமான பொருட்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் .

20. பெரிய வெண்மணி பஞ்சாயத்தில் உள்ள பருத்தி விவசாயிகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்து வருகிறார்கள் . இவர்களுக்கு இழப்பீடு கேட்டு மாவட்ட நிர்வாகத்திடம் பஞ்சாயத்தின் சார்பில் தீர்மானம் மனு அளிக்கப்படவேண்டும் .

21. பஞ்சாயத்துக்கு உட்பட்ட கிராமங்களில் அரசின் திட்டங்கள் எது செயல்படுத்துவதாக இருந்தாலும் பஞ்சாயத்து கிராம சபை ஒப்புதல் இல்லாமல் நடைமுறைப்படுத்தக் கூடாது .

22. இளைஞர்களுக்கு விளையாட்டு மைதானம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை கிராம மக்கள் இன்று முன்வைத்து சிறப்பான முறையில் கிராம சபை கூட்டம் இனிதே நிறைவுற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!