Home செய்திகள் தூத்துக்குடியில் மாபெரும் தபால் தலை கண்காட்சி: அரசு வெளியிடும் தபால் தலையில் நாங்களும் இடம் பெறுவோம் என மாணவ மாணவிகள் உறுதியேற்பு.!

தூத்துக்குடியில் மாபெரும் தபால் தலை கண்காட்சி: அரசு வெளியிடும் தபால் தலையில் நாங்களும் இடம் பெறுவோம் என மாணவ மாணவிகள் உறுதியேற்பு.!

by Askar

தூத்துக்குடியில் மாபெரும் தபால் தலை கண்காட்சி: அரசு வெளியிடும் தபால் தலையில் நாங்களும் இடம் பெறுவோம் என மாணவ மாணவிகள் உறுதியேற்பு.!

குடியரசு தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் மற்றும் தியாகிகள் தினத்தினை கொண்டாடும் நிகழ்வாக, மாணவர்களிடையே தேசிய உணர்வினை மேம்படுத்தும் வகையில் ‘சுரபி அறக்கட்டளையும்’, தூத்துக்குடி காமராஜ் நகர் சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியும், இணைந்து மாபெரும் தபால் தலை கண்காட்சி நடத்தினர்.

இன்று (27/01/2020) திங்கள் கிழமை, சுரபி அறக்கட்டளை, பள்ளி கல்லூரி மாணவர்களிடையே தேசிய உணர்வை மேம்படுத்தும் வகையில், சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்று வரை, முப்படை வீரர்களின் சாதனையை விளக்குகிற விதமாக வெளியிடப்பட்ட தபால் தலைகளையும், விடுதலைப் போரில் பங்கு பெற்ற தலைவர்களின், மகாத்மா காந்தியடிகளைப் பற்றிய பன்னாட்டு தபால் தலைகளையும் காட்சிப் படுத்தி மாணவரிடையே தேசிய உணர்வினை வளர்க்கும் முனைப்போடு ஏற்பாடு செய்திருந்த குடியரசு தினம், மகாத்மா காந்தி பிறந்த தினம் மற்றும் தியாகிகள் தினத்தினை கொண்டாடும் நிகழ்வாக, மாபெரும் தபால் தலை கண்காட்சியை,

முன்னதாக.. தூத்துக்குடி தலைமை தபால் அதிகாரி திரு. மிக்கேல் அவர்கள், கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

ஆராய்ந்து, திரட்டி, காட்சிப்படுத்தி தலைமை தாங்கிய முன்னாள் ராணுவ அதிகாரி. கர்னல் சுந்தரம் அவர்கள் (மாவட்ட உப தலைவர், முப்படைவாரியம், தூத்துக்குடி மாவட்டம்.) அரிதான பல சேகரிப்புகளைக் கொண்ட தனது தபால் தலைகளைக் காட்சிப் படுத்தி, அதனைப்பற்றி மாணவர்களிடையே விளக்கினார்.

சென்னையைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், முன்னாள் சிவில் சப்ளைஸ் உதவி ஆணையருமான திரு. அண்டன் டி. பாய்வா அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களின் ஆர்வத்தை வியந்து பேசினார்.

பள்ளியின் தாளாளர் திரு. R. சண்முகம் அவர்கள், பள்ளியின் முதல்வர் நல்லாசிரியர் திருமதி. A. ஜெயா சண்முகம் அவர்கள், பாரத் ஸ்கௌட் & கெய்ட் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திரு. C. எட்வர்டு ஜான்சன் பால் அவர்கள். தூத்துக்குடி, தூத்துக்குடி சமூக செயற்பாட்டாளர் திரு. BLOOD M.ஜெயபால் அவர்கள், ஏராளமான மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் கலந்து கொண்டு நாட்டின் முப்படை வீரர்களின் சாதனையையும் மகாத்மா காந்தி அடிகளின் பெருமையையும் விழிவிரிய கண்டு ஆனந்தித்தனர். மாணவச் செல்வங்கள் ஆர்வமுடன் அணுகி சந்தேகங்கள் கேட்டு விளக்கம் பெற்றனர். முழுமையாக குறிப்புகள் எடுத்துக் கொண்டு.. தாங்கள் தாய்நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம் என்று மாணவர்கள் உறுதி கூறினர்.

எழுத்தாளரும்,கவிஞருமான, திருமதி ஹேமா முரளிதரன் (செந்தாமரைக்கொடி) அவர்கள் சுரபி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், பேசும் போது..

தபால்தலை என்பது ஒரு சிறு துண்டுத்தாள் இல்லை. அது நம் தேசத்தின் வீர தீர தியாக வரலாற்றையும், சாதனையாளர்களின் அடையாளத்தையும் சுமந்து நாடு நாடாக பறைசாற்றும் சிறப்பான அங்கீகாரம்.. நமது நற்செயல்களுக்கு அரசால் தரப் படுகிற இன்னுமொரு விருது, கௌரவம்..

தபால்தலை என்றால் என்ன.. ஏன் வெளியிடப்படுகிறது. அதில் முகம் பதிக்கப்படுதல் என்பது எத்தகைய பெருமைக்குரிய செயல்.

காந்தித்தாத்தா போல் நேரு மாமா போல் ஜான்சி ராணி போல் கணிதமேதை ராமானுஜம் போல் வீரன் முத்துக்கோன் போல் நீங்களும் தபால்தலைகளில் இடம்பெறும் நாள் வரவேண்டும். அதற்கு தாய் நாட்டிற்காக பல சீரிய சாதனைகளைப் புரிபவர்களாக நீங்கள் வளரவேண்டும் என்று பேசினார்.

நாங்களும் அரசு வெளியிடும் தபால் தலையில் இடம் பெறுமளவு நாளைய தலைவர்கள் ஆவோம் என்று மாணவச் செல்வங்கள் உறுதி ஏற்று பெருங்குரல் கொடுத்தனர்.

சுரபி அறக்கட்டளையின் மக்கள் தொடர்பு அதிகாரி திருமதி சித்ராசெல்வி அவர்களின் ஒருங்கிணைப்பில் விழா இனிதே நடைபெற்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!