தேனி எம்பி கார் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உசிலம்பட்டியில் பாஜக சார்பில் கன்டன ஆர்பாட்டம்

நாடளுமன்றத்தில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக எம்பி ரவீந்திரநாத்குமார் வாக்களித்துள்ளார். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நடைபெறவிருந்த எம் ஜி ஆரின் பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற எம்பி ரவிந்திரநாத் குமாரின் காரின் கண்ணாடிகளை சிலா் சேதப்படுத்தி உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து 43 பேர் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் கார்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் தலைமையில் நடைபெற்றது. மேலும் மாநில செயலாளர் சீனிவாசன், மாவட்ட மருத்துவரணி தலைவர் விஜயபாண்டியன், தொகுதி பொறுப்பாளர்கள் ரஞ்சித் குமார், மாவட்ட செயலாளர் தங்கராஜ், ஒன்றிய தலைவர்கள் முருகன், சின்னச்சாமி, ஒன்றிய செயலாளர் நீதி, உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..