இராமநாதபுரத்தில் குடியரசு தின விழா..

இராமநாதபுரம் காவலர் கவாத்து மைதானத்தில் குடியரசு தின விழா நடந்தது. மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தேசியக்கொடி ஏற்றினார். தேசிய ஒருமைப்பாடு, அமைதியை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்கள் மற்றும் புறாக்களை பறக்கவிட்டார். போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து சுதந்திர போராட்ட வீரர்களை கவுரவித்தார்.

இவ்விழாவில் வருவாய், சமூக நலம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 182 பயனாளிகளுக்கு ரூ. 1.03 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தண்டனையின்றி பணியாற்றிய போலீசார் மற்றும் பல்வேறு ஊழியர்களின் சிறப்பான பணியை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.

இராமநாதபுரம் சரக டிஐஜி., ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், கூடுதல் ஆட்சியர் மா.பிரதீப்குமார், என்.ஓ சுகபுத்ரா, ஊரக வளர்ச்சி, கூடுதல் கண்காணிப்பாளர்கள் தங்கவேல், லயோலா இக்னேஷியஸ், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் வீ.கேசவதாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கோபு, முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் கே.செல்வக்குமார், கூட்டுறவு இணை பதிவாளர் முருகேசன், அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் தமிழ்மாறன் உள்பட பலர் பங்கேற்றனர் அரசு வாகனங்களை விபத்தின்றி கடந்த 20 ஆண்டுகளாக விபத்தின்றி ஓட்டிய டிரைவர்கள  என்.உதயக்குமார் (கூடுதல் ஆட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் ) கே. கணேசன் (ஊரக வளச்சித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம், பரமக்குடி) பி.பாஸ்கரன் (ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலகம், நயினார் கோவில்) ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தங்கப் பதக்கம் வழங்கி கவுரவித்தார். கூடுதல் எஸ்பி., லயோலா இக்னேஷியஸ், டிஎஸ்பி., கள் மகேஷ், வெள்ளைத்துரை, புகழேந்தி கணேஷ், ராஜேஷ், இன்ஸ்பெக்டர்கள் ஜான் பிரிட்டோ (தனிப்பிரிவு), செந்தில்குமரன், முத்துராமங்கம் (போக்குவரத்து காவல்), மகேஸ்வரி, ஜீவரத்தினம், எஸ்ஐ.,க்கள் ஜேசுதாஸ், நவநீதகிருஷ்ணன், தங்கமுனியசாமி , முனியசாமி, செந்தில்குமார், முருகானந்தம், குகனேஸ்வரன், ஜெயபாண்டியன், எஸ்எஸ்ஐ., கள் முத்துசுவாமி, கண்ணன், தலைமை காவலர் சிவசுப்ரமணியன், குமாரசாமி, ராம்குமார், முரளி கிருஷ்ணன், பாண்டி, கார்த்திக் ராஜன், சதீஷ்குமார், கஜேந்திரன், கேசவன், பாலமுருகன், ராஜேஸ்வரன், பெண் தலைமை காவலர்கள் அம்பிகா பகவதி, முதல் நிலை காவலர் ராஜ்குமார், காவலர் செல்லசாமி, செந்தூரான், அனந்தராஜ், திருமுருகன், முருகன், கலைவாணன், பிரபாகரன், சேதுபதி, கவுரி சங்கர், இளங்கோவன் (நி அ), துரைராஜ் (கண்காணிப்பாளர்) , சாந்தி தேவி (கண்காணிப்பாளர்): ஞானசவுந்தரி (உதவியாளர்) உஷா (உதவியாளர்) உள்ளிட்ட காவல் துறையினருக்கு பணி பாராட்டு நற்சான்று வழங்கப்பட்டது.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..