இந்திய நாட்டின் 71-வது குடியரசு தினம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்கொடியேற்றினார்.!

நாட்டின் 71-வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

சென்னை மெரினாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டுள்ள திடலில் கவர்னர் பன்வாரிலால் தேசியக் கொடியை ஏற்றினார். முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். தேசியக் கொடியை ஏற்றி வைத்த கவர்னர், முப்படை வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

முப்படை, காவல்துறை, என்சிசி என 48 படைகளின் அணிவகுப்பு மரியாதையை கவர்னர் ஏற்றுக் கொண்டார். குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனைக்கு பிறகு கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதேபோன்று, சென்னை நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் போலீசாரின் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..