பயத்தை விட்டொழியுங்கள் மாணவர்களுக்கு வேடிக்கை விநோத தன்னம்பிக்கை பேச்சாளர் ராஜேஷ் பெர்ணான்டோ அறிவுரை…

இராமநாதபுரம் அருகே தேவிபட்டினம் கிருஷ்ணா இன்டர்நேஷனல் பள்ளி, இராமநாதபுரம் ஈஸ்ட் கோஸ்ட் ரோட்டரி கிளப் சார்பில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரை இணைக்கும் வேடிக்கை விநோதத்துடன் கூடிய தன்னம்பிக்கை நிகழ்ச்சி நடந்தது. பள்ளி சேர்மன் மாதவனூர் எம்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். தாளாளர் கணேச கண்ணன், செயலாளர் ஜீவ லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பாடங்களை சலிப்பு தட்டாமல் மாணவர்கள் கற்றல் குறித்து வேடிக்கை விநோதங்கள், எளிய நிலையில் இருந்து வாழ்வில் உயர்ந்த சாதனையாளர்களின் கதைகள், வாழ்வியல் தத்துவங்களுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரை இணைக்கும் சமூக நடைமுறைகள் குறித்து பெங்களூரு கார்டன் சிட்டி பல்கலை., மதி(ப்பு)மிகு கல்விக் குழு தலைவர் பேராசிரியர் ராஜேஷ் பெர்ணான்டோ பேசினார்.

அவர் பேசுகையில், அறிவார்ந்த கல்வியை பொறுப்பு மற்றும் முழு ஈடுபாட்டுடன் கற்றால் 100 சதவீத வெற்றி இலக்கை எட்டி சாதிக்கலாம் என கிருஷ்ணா (KRISHNA) பள்ளியின் ஒவ்வொரு எழுத்திற்கும் (Knowledge, Responsibility, Involvement, Success, Hundred, Never give up Achievement) என தன்னம்பிக்கை விளக்கம் அளித்து மாணவர்கள், பெற்றோர், ஆசிரியரை ஒருங்கிணைத்து பேசினார்.

மேலும் அவர் பேசுகையில்,  ஒருவருடைய சிந்தனை, உணர்ச்சி, வாழ்க்கை ஆகியவற்றை பயம் அழித்து விடும் என்பதால் அச்சத்தை விட்டொழித்து பிரச்னைகளுக்கு மதி நுட்பத்துடன் தீர்வு காண வேண்டும். வாழ்க்கையில் தெரிந்து, புரிந்து கொள்ள வேண்டியது நிறைய உள்ளன. கற்கும் காலத்தில் மாணவர்கள் வெற்றி இலக்கை சவாலாக ஏற்று சாதிக்க வேண்டும் என்றார். பங்கேற்பாளர்களுடன் கூடிய பேராசிரியர் ராஜேஷ் பெர்ணான்டோ வேடிக்கை விநோத நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. ரோட்டரி கிளப் நிர்வாகிகள் சுகுமாறன், தினேஷ் பாபு, ஜெயக்குமார், ராஜாராம் பாண்டியன் , மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் முத்துக்குமார் நன்றி கூறினார்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..