இந்தியாவில் முதன் முறையாக தானியங்கி முறையில் சமையல் செய்யும் ரோபோசெப் இயந்திர மனிதன் மதுரையில் அறிமுகம்

இந்தியாவில் முதன் முறையாக தானியங்கி முறையில் சமையல் செய்யும் ரோபோசெப் இயந்திர மனிதன் மதுரையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரோபோசெப் 600 க்கும் மேற்பட்ட உணவுகளை தயாரிக்கும் திறன் கொண்டவை.இந்த இயந்திர மனிதன் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கான உணவை சமைக்கும் ஆற்றல் கொண்டது. இந்த ரோபோசெஃப் பினால் தயாரிக்கப்படும் உணவு முழுவதும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் தயாரிக்கப்படுகிறது. இந்த உணவு 6 மணி நேரத்திற்கு சூடாக வைத்திருக்கும். இந்த ரோபோவை உருவாக்கிய சென்னையைச் சேர்ந்த ரோபோசெஃப் நிறுவனம் பல விருதுகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் நிறுவன உரிமையாளர் சரவணன் சுந்தரமூர்த்தி, ஹேமாவதி பாலசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..