வேகமாக பரவி வரும் கொரேனோ வைரஸ்: அடுத்தடுத்து உயிரிழப்பு பீதியில் சீனா-மற்றும் ஆசிய நாடுகள்.!

சீனாவின் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக  கூறப்படுகிறது.

இந்த கொரோனா வைரஸ் காய்ச்சல் 1.1 கோடி பேர் வசித்து வரும் வுகானில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு முதலில் 3 பேரும், பின் 6 பேரும் பலியாகினர். பின்பு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்துள்ளது என்று சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வுகான் நகரில் பேருந்து போக்குவரத்து சேவை தற்காலிக ரத்து செய்யப்பட்டது. ரெயில்வே மற்றும் விமான போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டது. வுகான் நகர குடியிருப்புவாசிகள் வைரஸ் பரவாமல் இருக்க முகமூடிகளை அணிந்து கொள்ளும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.

இதனிடையே, சீனாவில் நேற்று(25/01/2020)  ஒரே நாளில் 15 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை நேற்று 41 ஆக உயர்ந்தது. பலியானோர் அனைவரும் 55 வயது முதல் 87 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 11 பேர் ஆண்கள். 4 பேர் பெண்கள். சீனா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலுக்கு 1,300 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு 13 பேர் பலியான நிலையில், பலியானோர் எண்ணிக்கை 54 ஆக உயர்ந்துள்ளது என உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று 323 பேர் கூடுதலாக பாதிப்பு அடைந்து உள்ளனர் என பதிவு செய்யப்பட்டு உள்ளது.

சீன தேசிய சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய கொரோனா வைரஸ் 1,287 பேரிடம் பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..