கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் கீழக்கரை காவல் துறை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி..

கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் கீழக்கரை காவல் துறை இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணி கீழக்கரை பேருந்து நிலையத்திலிருந்து காவல் நிலையம் வரை நடைபெற்றது. இந்த பேரணி  ரோட்டரி சங்க தலைவர் முனிய சங்கர் தலைமையில்,  பட்டய தலைவர் அலாவுதீன் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.

கீழக்கரை காவல் சார்பு ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர்,  கீழக்கரை ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் ராஷிக்தீன்,  சுந்தரம்,  உறுப்பினர்கள் ஹசனுதீன் எபன் தவமணி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இப்பேரணியில் தலைக்கவசம் உயிர்க்கவசம் என்ற வாசகங்கள் வழங்கப்பட்டது. 15 வாகன ஓட்டிகளுக்கு இலவச தலை கவசம் வழங்கப்பட்டது. வாகனங்களின் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..