தென்காசி புதிய மாவட்டத்தின் முதல் குடியரசு தின விழா- மாவட்ட ஆட்சியர் குடியரசு தினவிழா மைதானத்தில் நேரில் ஆய்வு

ஜனவரி.26 நாளை இந்தியா முழுவதும் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.நெல்லை மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து தென்காசி மாவட்டம் உருவானது. இந்த மாவட்டத்தின் முதல் குடியரசு தினவிழா நாளை தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது.இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கப்பட உள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகளும் கௌரவிக்கபட உள்ளார்கள்.

இந்த விழா நடைபெறும் மைதானத்தை 25.01.2020 இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் ஆகியோர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர்.காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர், பள்ளி மாணவ-மாணவிகள் விழாவிற்கான ஒத்திகையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.அதனைத் தொடர்ந்து நடைபெறும் அணிவகுப்பு ஒத்திகைகளையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் மேற்பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..