கீழக்கரையில் 275 மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள்..

கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்த  மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவ ராவ் ராமநாதபுரம் சட்டமன்ற  உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன் ஆகியோர் 275 மாணவ, மாணவியர்களுக்கு  ரூ.41.25 இலட்சம் மதிப்பிலான தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார்கள்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேசியதாவது: தமிழ்நாடு அரசு மாணவ, மாணவியர்கள் நலனுக்காக பள்ளிக்கல்வித் துறையின் மூலம்  பல்வேறு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஏழை, எளிய மாணவ,  மாணவியர் பயன்பெறும் வகையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும்  மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை 40 லட்சம்  மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. விழாவில் 275 மாணவ, மாணவியருக்கு ரூ.41.25  லட்சம் மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

இதன் மூலம் மாணவ, மாணவியர் தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி  உலகளாவிய தகவல்களை கற்றறிவதற்கும், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார்  செய்து கொள்வதற்கு வாய்ப்பாக அமைகிறது. மாணவ, மாணவியர் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகளை ஆக்கப்பூர்வ முறையில் உபயோகித்து  பயன்பெற வேண்டும் என பேசினார்.

இந்நிகழ்ச்சியில், கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் டாக்டர் அ.அலாவுதீன், சென்னை முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் அல்ஹாஜ் எஸ்.எம்.முஹம்மது யூசுப், முகம்மது சதக் அறக்கட்டளை இயக்குநர் ஜனாப் பி.ஆர்.எல்.ஹாமீது இப்ராகீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..