தூத்துக்குடியில் பெரியம்மாவை பராமரிக்காமல் கழிவறையில் வைத்து கொடுமை படுத்திய வளர்ப்பு மகன், மருமகள் கைது.!

தூத்துக்குடியில் பெரியம்மாவை பராமரிக்காமல் கழிவறையில் வைத்து கொடுமை படுத்திய வளர்ப்பு மகன், மருமகள் கைது.!

தூத்துக்குடி கோட்ஸ் நகரில் வசிக்கும் நிகோலஸ் என்பவர் தனது பெரியம்மா திருமதி மரிய மிக்கேல் என்ற 92 வயது மூதாட்டியை சரியாக பராமரிக்காமல் கழிப்பறையில் தங்க வைத்து,உணவு வழங்காமல் கொடுமை படுத்துவதாக சமூக வலைதளத்தில் பரவியது.

இதனை அறிந்த தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் உத்தரவுபடி தூத்துக்குடி நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு.R.பிரகாஷ் அவர்களின் மேற்பார்வையில் தூத்துக்குடி தென் பாகம் காவல்துறையினர் உடனடியாக அந்த மூதாட்டியை வளர்ப்பு மகன் வீட்டில் இருந்து சமூக நலத்துறை உதவியுடன் மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்து முதியோர் கருணை இல்லத்தில் சேர்த்து உள்ளார்கள்.

இதனை விசாரணை செய்த தென் பாகம் காவல்துறையினர் தூத்துக்குடி கோட்ஸ் நகரில் வசிக்கும் மூதாட்டியின் மகன் நிகோலஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மூதாட்டியை கொடுமை படுத்துவதாக சமூக வலைதளத்தில் செய்திகள் பரவியதை கவனத்தில் கொண்டு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினரை பொது மக்களும், சமூக வலைதளத்திலும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..