துக்ளக்கை நான் அபகரித்தேனா? குருமூர்த்தி விளக்கம்.!

நான் துக்ளக்கை யாரிடம் இருந்தும் அபகரிக்கவில்லை. 1988ஆம் ஆண்டு ஆனந்த விகடன் குழுமத்திடம் இருந்து, ராம்நாத் கோயங்கா என்பவரின் கோரிக்கையின் பெயரில் துக்ளக்கை வாங்கினேன். ஆனால் அதில் எனக்கு பங்கு இல்லை. என் மனைவிக்கு மட்டுமே பங்கு இருந்தது.

அதேபோல் சோவிற்கும் துக்ளக்கில் பங்கு இருந்தது. அதன்பின் சோதான் துக்ளக்கை நடத்தி வந்தார். என் மனைவி பணிகளை கவனித்தார். நான் நேரடியாக எந்த பணியையும் மேற்கொள்ளவில்லை. ஆனால் அவ்வப்போது கட்டுரைகள் எழுதுவேன். சோ உடன் இணைந்து நிறைய திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம். முக்கியமான கட்டுரைகளை எழுதி இருக்கிறோம்.

2007ஆம் ஆண்டு துக்ளக்கில் என்னை வாரிசாக வேண்டும் என்று சோ கோரிக்கை வைத்தார். ஆனால் நான் மறுத்துவிட்டேன். 2013 வரை அவர் இந்த கோரிக்கையை வைத்தார். ஆனால் நான் ஏற்கவே இல்லை. அவர் இறக்கும் முன் கூட, 2008ல் துக்ளக் இதழின் 50% பங்குகளை மீண்டும் அவரிடமே விற்றுவிட்டேன். எனக்கு துக்ளக் மீது விருப்பம் இல்லை என்பதை உணர்த்த இப்படி செய்தேன். ஆனால் சோ தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தார்.

அதன்பின் சோவின் மறைவுக்கு பின் துக்ளக்கின் பொறுப்பை நான்தான் ஏற்க வேண்டும் என ரஜினிகாந்த் உள்ளிட்ட பலர் என்னிடம் வலியுறுத்தினார்கள். சோ மறைந்த அடுத்த நாள் துக்ளக்கின் மொத்தக்குழுவும் தன்னை சந்தித்து பொறுப்பேற்க வலியுறுத்தியது . அப்போது தமிழகம் மிகப்பெரிய அரசியல் மாற்றங்களை கண்டு கொண்டிருந்தது. இதனால் துக்ளக்கின் பொறுப்பை நான் ஏற்றுக்கொண்டேன்.

ஆனால் இப்போது வரை துக்ளக்கில் கட்டுரை எழுத்துவதற்காக, அதில் பணி செய்வதற்காக நான் சம்பளம் வாங்கவில்லை. என் நாளில் 50% நேரத்தை நான் துக்ளக்கிற்காக ஓதுகிறேன். ஆனால் நான் அதை அபகரிக்கவில்லை. அதை அபகரிக்கும் எண்ணம் எனக்கு இருந்திருந்தால், 1991தில் இருந்து வெளியேறி இருக்க மாட்டேன், 2008ல் என் பங்குகளை விற்று இருக்க மாட்டேன் என்று குருமூர்த்தி கூறியுள்ளார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..