மரைக்காயர்பட்டினம் பள்ளியில் மாணவர் திறனறி தேர்வு

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் மரைக்காயர் பட்டினம் தொடக்கப் பள்ளி மேலாண் குழு கூட்டம் மற்றும் எய்ட் இந்தியா தொண்டு நிறுவனம் மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடங்களில் திறனறி தேர்வு நடந்தது. ஊராட்சி மன்றத் தலைவி பைரோஸ் ஆசியம்மாள், பள்ளி மேலாண் குழு தலைவி மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சாதிக் , எய்ட் இந்தியா வட்டார ஒருங்கிணைப்பாளர் அருண்குமார், பயிற்றுநர் ராதா மற்றும் வித்யாரம்பம் மாநில ஒருங்கினைப்பாளர் பிரபாவதி மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர். தேர்வில் தேறிய மாணவர்களுக்கு பாராட்டு சான்று, பரிசு வழங்கப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் பொ.ரவிச் சந்திரன் ஏற்பாடு செய்திருந்தார்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..