திருப்புல்லாணி அருகே மேதலோடை உயர்நிலை பள்ளியில் புதிய கட்டட திறப்பு விழா

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் மேதலோடை நாடார் மஹாஜன சங்க உயர்நிலைப்பள்ளி, நா.ம.ச சேர்மத்தாய் வாசன் தொடக்கப் பள்ளி புதிய கட்டடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. சிவகாசி காளீஸ்வரி குழும நிர்வாக இயக்குநர் செல்வராஜ் தலைமை வகித்தார். நாடார் மஹாஜன சங்க தலைவர் முத்துச்சாமி, பொதுச்செயலாளர் கரிக்கோல் ராஜ், பொருளாளர் நல்லதம்பி, இணை செயலர்கள் ஆனந்தகுமார், மாரிமுத்து, நாடார் மஹாஜன பள்ளிகள் செயலர் மோகன் முன்னிலை வகித்தனர். 2014-15 எம்எல்ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டிய. அறிவியல் ஆய்வகத்தை சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜவாஹிருல்லா
திறந்து வைத்தார்.ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, நா.ம.ச சேர்மத்தாய் வாசன் உயர்நிலைப்பள்ளி தலைவர் ராமசாமி, நா.ம.ச. உயர்நிலைப்பள்ளி தலைவர் மாணிக்கம், சேர்மத்தாய் வாசன் தொடக்கப் பள்ளி தலைவர் நவநீதன், தலைமை ஆசிரியர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு மெக்கண்டைல் வங்கி சமூக வளர்ச்சி நீதியில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறையை முன்னாள் இயக்குநர் ராஜேந்திரன் திறந்து வைத்தார். இயக்குநர்கள் சிதம்பரநாதன், நாகராஜன், விஜயதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி துணைத் தலைவர் சந்தோச பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நா.ம.ச. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முனியசாமி ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில் 2018-19 கல்வி ஆண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் முதல் மூன்றிடம் பிடித்த மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர்கள் கணேஷ் (உத்தரவை), கோபி (குதக் கோட்டை) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..