தை அமாவாசையையொட்டி ராமேஸ்வரத்தில் குவிந்த மக்கள்

இந்துக்களின் முக்கிய விரத நாட்களான தை, ஆடி, மஹாளய அமாவாசை நாட்களில் தென்னகத்து காசியான ராமேஸ்வரத்தில் ஏராளமான மக்கள் வந்து வழிபாடு நடத்துவதுண்டு . இன்று (24.01.2020) தை அமாவாசையை முன்னிட்டு நேற்று இரவு முதல் குவிந்த மக்கள் இன்று அதிகாலை 4 மணி அளவில் தர்ப்பணம் செய்து அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி மறைந்த முன்னோரை வழிபட்டனர். இதன்பிறகு ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் புனித நீராடி தரிசனம் செய்தனர். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து ஏராளமான வாகனங்கள் வந்ததால் ராமேஸ்வரம் சுற்று வட்டாரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..