எம்.பி.ரவீந்திரநாத் குமார் கார் வழிமறிப்பு-சாலை மறியல்-பரபரப்பு.!

 தேனி மாவட்டம் பெரியகுளம் தண்டுபாளையம் பள்ளிவாசலை சேர்ந்த  இஸ்லாமியர்கள், பெரியகுளம் – தேனி நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அஇஅதிமுக சார்பில் தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் எம்ஜிஆரின் 103 வது பிறந்தாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற இருந்த சூழ்நிலையில், அவற்றில் கலந்து கொள்ள தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனிநாடாளுமன்ற உறுப்பினருமான ஓ.ப. ரவீந்திரநாத் குமார் கலந்து கொள்ள இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அவரது வருகையின் போது தேசிய குடியுரிமை சட்டத்திற்கு நாடளுமன்றத்தில் ஆதரவு தெரிவித்ததற்காக துணை முதல்வரின் மகனும் தேனி  நாடளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார் வந்த வாகனம் இஸ்லாமியர்களால் மறிக்கப்பட்டு எதிர்ப்பு காட்டப்பட்டது.

இந்த சூழ்நிலையில் போக்குவரத்து  பாதிக்கப்பட்டது.தகவலறிந்து வந்த போலீசார் தடியடி நடத்தி, எம்.பி ரவீந்தரநாத் குமாரை பத்திரமாக அழைத்துச் சென்றனர். இதனால்
கம்பம் பகுதியில் நடைபெறவிருந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரின் காரை வழிமறித்த சுமார் 40 இஸ்லாமியர்களை கம்பம் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்கக் கோரி பெரியகுளம் பகுதியில் இஸ்லாமியர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் சேர்ந்த கிழக்கு மாவட்டச் செயலாளர் நாகரத்தினம் மறியலில் கலந்து கொண்டனர்.

A சாதிக்பாட்சா.நிருபர் தேனி மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image