கீழக்கரை அல்பையினா பள்ளியில் மாணவர்களுக்கு காய்கறி தோட்டத்தின் அவசியம் பற்றிய கருத்தரங்கம்..

வீடு என்பது வெறுமனே கட்டடம் மட்டுமல்ல… ஆரோக்கியமான சூழலும் மனிதர்கள் ஒன்றுகூடி வசிக்குமிடமுமாகும் என்பதை மறந்து, குருவி கூடாக மாறி வரும் நிலையை நாம் பார்த்து வருகிறோம். இதனால் ஆரோக்கியத்தின் அவசியத்தை மறந்து, அதற்கு செடி கொடிகள் மரங்கள் தேவை என்ற எண்ணமே மறக்கடிக்கப்பட்டுவிட்டது என்பது உண்மை.

இச்சூழலை மாற்றும் வண்ணம், வளரும் மற்றும் வருங்கால  சமுதாயத்தினர் விவசாயத்தின் முக்கயத்துவத்தை மனதில் விதைக்கும் வகையில் கீழக்கரை அல்பையினா  பள்ளி வளாகத்தில் 23/01/2020 அன்று  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் சார்பாக இராமநாதபுரத்தில் அமைந்திருக்கும் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சார்பாக பேராசிரியர்கள் பள்ளியில் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்யும் காய்கறி தோட்டம் அமைப்பதற்கான பயிற்சி முகாமை நடத்தித்தினர்.

இந்நிகழ்வில் மாணவர்களுக்கு செடி வளர்ப்பது, மரம் வளர்ப்பது, அதை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்பது பற்றிய பல தகவல்களை கூறி மாணவர்களை ஊக்கப்படுத்தினார். இதன் தொடர்ச்சியாக அல்பையினா பள்ளியில் தோட்டம் அமைக்கும் திட்டம் செயல்பட்டு வருகிறது.

To Download Keelainews Android Application – Click on the Image

மார்ச் மாத இதழ்..

மார்ச் மாத இதழ்..