நாட்டின் பிரதமருக்கு இல்லாத அதிகாரம் கூட ஊராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது: அமைச்சர் செல்லூர் ராஜூ.!

மதுரை நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது, மத்திய-மாநில அரசுகள் சார்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அந்த திட்டங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் பணியில் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். குடிசை வீடுகளை ஓட்டு வீடுகளாக எம்.ஜி.ஆர். மாற்றினார். ஜெயலலிதா ஓட்டு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற வேண்டும் என உறுதி பூண்டார். அவரது கனவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் நனவாக்கி வருகின்றனர். இந்த திட்டத்தில் கருணாநிதிக்கும் பங்கு இருக்கிறது. நான் எதையும் மறைத்து பேச மாட்டேன்.

நானும் ஒரு காலத்தில் உள்ளாட்சி பிரதிநிதியாக இருந்தவன்தான். மாநகராட்சி கவுன்சிலராக இருந்தபோது அதிகாலை 4 மணிக்கு எனது ஸ்கூட்டரில் வார்டு முழுவதும் வலம் வருவேன். குடிநீர் பிரச்சினையை தீர்க்க தெருத் தெருவாக செல்வேன். அப்போது பெண்கள், “என்ன ராசு இத்தனை மணிக்கே வந்துட்ட” என்று கேட்பார்கள். அந்த பெண்களின் ஆதரவு தான் என்னை இன்று ஒரு அமைச்சராக உயர்த்தி இருக் கிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்காக தொடர்ந்து பாடுபட வேண்டும். எதிர்காலத்தில் நீங்கள் முதல்-அமைச்சராக கூட வரலாம். இப்போது இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூட ஒரு சாதாரண விவசாயி தான். நாட்டின் பிரதமருக்கு இல்லாத அதிகாரம் கூட ஊராட்சி மன்ற தலைவருக்கு இருக்கிறது. அதனை புரிந்து கொண்டு மக்கள் பணியாற்றுங்கள். இந்த அரசு உங்களுக்கு துணை நிற்கும்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..