சாலை பாதுகாப்பு வார விழா

31-வது சாலை பாதுகாப்பு வார விழாவை (20.01.2020 to 27.01.2020) முன்னிட்டு காவல்துறையினர், தொண்டு நிறுவனங்கள், ஊர்க்காவல் படையினர், பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்துகொண்ட விழிப்புணர்வு நடைபயண பேரணியை வருவாய்.பேரிடர் மற்றும் மேலாண்மை துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு, R.B.உதயகுமார்  மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.மணிவண்ணன் , ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்து, விழிப்புணர்வு நடைபயண பேரணியில் கலந்துகொண்டனர்.இந்த நடைபயண பேரணியில் ADSP .கணேசன்  மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு நடைபயண பேரணியானது, திருமங்கலம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி உசிலம்பட்டி ரோடு மற்றும் அரசு மருத்துவமனை வழியாக வந்து ராஜாஜி சிலை வரை வந்து முடிவடைந்தது. மேலும் சாலை விதிகளை சரியாக பின்பற்றி வந்த வாகன ஓட்டிகளுக்கு ரோஜா மலர் கொடுத்து வாழ்த்தி, வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக தலைக்கவசம் மற்றும் கார்களில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிந்து பயணிக்குமாறு பொதுமக்கள் அனைவருக்கும் அவர்கள் அறிவுரை வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..