என்னம்மா இப்படி பன்றிங்களேமா: மதுரை-உசிலம்பட்டி ரயில் சோதனை ஓட்டத்திற்கே “சோதனை”.!

என்னம்மா இப்படி பன்றிங்களேமா: மதுரை-உசிலம்பட்டி ரயில் சோதனை ஓட்டத்திற்கே “சோதனை”.!

ஊருக்கு செல்லும் பாதையை விட வேண்டும் என பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் எதிர்ப்பு இரயில்வே போலிசார் சமரசம்.!

மதுரை – உசிலம்பட்டி ரயில் நிலையங்களுக்கு இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. இந்தப் பகுதியில் ரயில் போக்குவரத்து துவங்குவதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த 37 கிலோ மீட்டர் தூரம் உள்ள புதிய அகல ரயில் பாதையில் தென் மண்டல பாதுகாப்பு ஆணையர் மனோகரன்,  மோட்டார் டிராலி மூலம் பாதுகாப்பு சோதனைகள் செய்து வருகிறார். ரயில் மூலம் அதிவேக சோதனை ஓட்டம் நடத்தி ஆய்வு மேற்கொள்ளவும் இருக்கிறார். பின்பு அவர் ரயில் பாதைக்கான பாதுகாப்பு சான்றிதழ் அளித்த பிறகு ரயில் போக்குவரத்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு ஆணையருடன் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின், முதன்மை நிர்வாக அதிகாரி . எ.கே. சின்கா, முதன்மை சமிக்ஞை பொறியாளர் . வெங்கடாசலம் ஆகியோர் உடனிருந்தனர். இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி இடையே ஆலம்பட்டி பகுதியில், ஊருக்கு செல்கிற வழியில் பாதை விடக்கூறியும், இல்லாவிட்டால் கேட் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.மேலும் லெனின் அவர்களிடம் மனு ஒன்றையும் அளித்துள்ளனர்.தண்டவாளம் முழுவதும் இரயில்வே மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..