கீழை பதிப்பகத்தின் சார்பாக மூன்று புத்தகங்கள் 2020ம் வருட சென்னை 43வது புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது..

சென்னையில் வருடம் தோறும் நடைபெறும் புத்தக கண்காட்சி இந்த வருடத்தின் 43வது புத்தக கண்காட்சி YMCA மைதானத்தில் கடந்த ஜனவரி 9 முதல் 21ம் தேதி அவரை நடைபெற்றது.  இதில் நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  இந்த வருட கண்காட்சியில் லட்ச கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை வாங்கியுள்ளது குறிப்பிடதக்கது.

இதன் தொடர்சியாக “கீழை பதிப்பகம்” சார்பாக மூன்று எழுத்தாளர்களின் புத்தகம் வெளியிடப்பட்டது.. கீழக்கரையை சார்ந்த  செய்யது ஆப்தீன்  எழுதிய *”தமிழ் யாருக்கு சொந்தம்” என்ற புத்தகத்தை பதிப்பு துறையில் பல ஆண்டுகளாக சிறப்பாக முத்திரை பதித்து வரும் சாஜிதா புக் சென்டர் ஜக்கரியா வெளியிட்டார் . இந்த நிகழ்வுக்கு கீழை பதிப்பகத்தின் நிர்வாக இயக்குனர் முசம்மில் முன்னிலை வகித்தார்.

அதே போல் மௌலவி நூஹ் மஹ்ளரி  அதிகாலை ஆண்கள் நூலையும், சமரசம் ஆசிரியர் சையத் சுல்த்தான், நூரிதீன் எழுதிய  பொற்காலா உலா நூலையும் வெளிட்டனர் .

புனித ரமலான் வாழ்த்துக்கள்..