உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் பேராசியரைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் செயல்பட்டு வரும் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர் கனேசன் அங்கு பயிலும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள் துறை பேராசிரியர் தினேஷிடம் புகார் அளித்தனர்.இது குறித்து பேராசிரியர் தினேஷ், கனேசனை தட்டிக் கேட்டுள்ளார். பேராசியர் கணேசன் தூண்டுதலின் பேரில் கல்லூரி நிர்வாகம் தினேஷை வேறு கல்லூரிக்கு பணிமாறுதல் செய்துள்ளதாகத் தெரிகிறது. மேலும் தினேஷின் கம்ப்யூட்டர் துறைக்கு அத்துறைக்கு சம்மந்தமில்லாத கணேசனை ( கணிதவியல்) கூடுதல் பொறுப்பாக நியமித்தாகத் தெரிகிறது.இதில் கணேசன் தொடர்ந்து மாணவ மாணவிகளை துன்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனையறிந்த கல்லூரி மாணவர்கள் தினேஷின் பணிமாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாலியல் துன்புறுத்தலில் ஈடபட்ட பேராசிரியர் கனேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வகுப்புக்களை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இப்போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது.இவர்களிடம் கல்லூரி நிர்வாகத்தின் சார்பிலும் காவல்துறையின் சார்பிலும் (சாலைப் பாதுகாப்பு வார நிகழ்ச்சியில் பிஸியாக உள்ளனர் ) யாரும் பேச்சுவார்த்தை நடத்த முன் வராததால் சுமார் 2 மணி நேரத்திற்குப்பின் தாங்களாகவே கலைந்து சென்றனர்.மேலும் அடுத்த கட்ட போராட்டம் குறித்து ஆலோசனை செய்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..