பள்ளப்பட்டியில் சிறுபான்மையினருக்கான வட்டியில்லா கடன் மேளா.!

பள்ளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தின் மாடியில்   தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் நலத்துறை சார்பில். சிறுபான்மையின மக்களுக்கு மாநில மற்றும் மத்திய அரசுகளால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்த விளக்கக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறுபாண்மையினர் நலத்துறை வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் தலைமை வகித்தார்கள்.

மருந்து வணிகர் சங்க மாவட்ட ஆலோசகர் பாப்புலர் அபுத்தாஹிர் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பள்ளப்பட்டி, திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் சரவணன்  லோன் மேளா குறித்த விளக்கங்களை தொகுத்து வழங்கினார்.

ஆண்டிபட்டி, அரவக்குறிச்சி கூட்டுறவு சங்கத்தின் செயலாளர்களும் இந்த முகாமில் கலந்து சிறப்பித்தனர்.

மாவட்ட சிறுபான்மை நலத்துறையின் கருத்தாளர் சக்கரை மன்ஜில் சகில்  நன்றியுரை விளங்கினார்.

சிறுபான்மை இன மக்களுக்கான டாம்கோ வழங்கும் லோன் மேளா மாறலாக குறைந்த வட்டியில் கடன் பெறுவது எப்படி. மானியத்தில் கடன் பெறுவது எப்படி. குழுவாகச் சேர்ந்து கடன் பெறுவது எப்படி என்ற விளக்கங்கள் தரப்பட்டன.

முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மாறலாகம வட்டாட்சியரை தொடர்பு கொண்டு ஒரு லட்சம் கொடுத்தால் பரிசீலனைக்கு பிறகு அரசு சார்பில் இரண்டு லட்சம் சேர்த்து மொத்தம் மூன்று லட்சம் கொடுப்பார்கள், இந்த மூன்று லட்சத்தை 15 நபர்களுக்கு சிறு சிறு தொழில் செய்வதற்காக 20,000 என பிரித்துக் கொடுக்கலாம். இந்த பணத்தை திருப்பி செலுத்த வேண்டியதில்லை என்பது கூடுதல் சிறப்பு. இது ஒரு நல்ல திட்டம் பெரும்பாலான முஸ்லிம் மக்கள் இதை பயன்படுத்த முன்வர வேண்டும்.

இது குறித்து மேலும் சந்தேகங்கள் இருப்பின் பின்வரும் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

த.சி.ந.து. மாவட்ட கருத்தாளர் சக்கரை மன்ஜில் சகில்

99949 51786

இம்மேளாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image