பெரியாரை உயிர் துடிப்புடன் வைத்திருக்க உதவிய திராவிடர் ரஜினிக்கு நன்றி-திமுக எம்.பி யின் ட்வீட்டால் பரபரப்பு

தந்தை பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பேசிய விவகாரத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.கடந்த 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் 50ம் ஆண்டு நிறைவு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று பேசினார். அப்போது, அவர் பெரியார் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு தமிழக திராவிட கட்சிகளிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

எனினும் இது பற்றி மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியதால், இவ்விவகாரம் மேலும் பெரிதாகி சர்ச்சையானது. ரஜினி பேசும் போது துக்ளக் மட்டுமே இதனை வெளியிட்டது என்றார். ஆனால் செய்தியாளர்கள் சந்திப்பில் அவுட்லுக் பத்திரிகையை ஆதாரமாக காட்டி அந்தர் பல்டி அடித்துள்ளார். இது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியதோடு, ரஜினி மேலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.இந்நிலையில் நடிகர் ரஜினிக்கு திமுகவின் தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதி எம்பி செந்தில் குமார் ட்வீட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் “தமிழகத்தில் #பெரியாரை உயிர் துடிப்புடன் வைத்திருக்க உதவிய திராவிடர் ரஜினி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.” என்று தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..