பிரதோஷ விழாவில் செய்தியாளர்களுடன் கோவில் நிர்வாகத்தினர் வாக்குவாதம்-காவல்துறையினர் தலையிட்டு சமாதான பேச்சு வார்த்தை

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி கோமதி அம்பாள் திருக்கோவிலுக்கு என்று பிரதோஷ வழிபாடு முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.இதனை செய்திக்காக படமெடுக்க செய்தியாளர்கள் கோயிலுக்குள் சென்று கேமராவை எடுத்தபோது கோவில் நிர்வாகத்தினர், செய்தியாளர்களை கோவிலுக்குள் படமெடுக்க இந்து அறநிலைத்துறை அனுமதி அளிக்கவில்லை என்று என்று கூறியுள்ளனர்.இதனையடுத்து இத்தனை வருடங்களாக நடைமுறையில் இல்லாத ஒன்று இன்று மட்டும் குறிப்பிட்டு மறுப்பதற்கு காரணம் கேட்டுள்ளனர்.

இதனையடுத்து கோவில் நிர்வாகத்தினருக்கும் செய்தியாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட உடனடியாக காவல் துறையினரும் கோவிலுக்குள் நுழைந்தனர். ஏற்கனவே சங்கரன்கோவில் முழுவதும் தொடர்ந்து கோவிலுக்குள் நடக்கும் அனைத்து பூஜைகளுக்கும் , கட்டண தரிசனங்களும் அதிகப்படியாக கடந்த வாரத்தில் கோவில் நிர்வாகம் உயர்த்தி உள்ளதாக பக்தர்கள் சார்பிலும், ஆன்மீக சங்கங்கள் சைவ சித்தாந்த சபை , அகில இந்திய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்டவை தங்களது எதிர்ப்பை எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.தற்போது செய்தியாளர்களையும் கோயிலுக்குள் அனுமதி மறுக்கும் நிர்வாகத்தினர் உடன் பக்தர்களும் ஒன்றுகூட ஆரம்பித்த போது காவல்துறையினர் உடனடியாக தலையிட்டு அனைவரையும் சமாதான பேச்சுவார்த்தை கூறி அனுப்பி வைத்தனர். இதனால் சங்கரன் கோவிலில் பிரதோஷ வழிபாடு செய்ய வந்த பக்தர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image