உசிலம்பட்டியில் சாலை பாதுகாப்பு குறித்தி விழிப்புணர்வு பேரணி

தமிழகம் முழுவதும் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு குறித்து காவல்துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி போக்குவரத்து பணிமனையிலிருந்து பேருந்து நிலையம் வரை பல்வேறு பள்ளிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு பேரணியாக சென்றனர். இந்த பேரணியை உசிலம்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா தொடங்கி வைத்தார். இதில் மேலும் இன்ஸ்பெக்டர் சார்லஸ், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆறுமுகம், சார்பு ஆய்வாளர் சிவபாலன், சேகர், ராமர், பாண்டியமன்னன், போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் பழனியப்பன் ,தவராஜா, சவுந்தரபாண்டி மற்றும் மயில்வாகனபூபதி உள்ளிட்ட ஏராளமான போலீசார்கள், பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

உசிலை சிந்தனியா

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..