ராமநாதபுரம் எஸ்பி., யிடம் பாராட்டு பெற்ற பிளஸ் 1 மாணவி

மும்பையில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகளப் போட்டியில், ஈட்டி எறிதலில் மூன்றாமிடம் பிடித்த இராமநாதபுரம் மாவட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் மோகன் மகள் ஐஸ்வர்யா (முகமது சதக் தஸ்தகிர் மெட்ரிக்., பள்ளி + 1 மாணவி) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் வீ.வருண்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றார். ஐஸ்வர்யா , கடந்த காலங்களில் நடந்த வட்டெறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் தங்கம் 43, வெள்ளி 14, வெண்கலம் 9 பதக்கங்கள் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்த மாணவி ஐஸ்வர்யாவை பரமக்குடி மினு ஸ்போர்ட்ஸ் அகாடமி பயிற்சியாளர் சரவண சுதர்சன் பாராட்டினர்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image