டோல்கேட்களை அப்புறப்படுத்தக்கோரி பாமக., டயர் பொருத்திய மாட்டு வண்டி பயணம்

டோல்கேட்களை அப்புறப்படுத்த வலியுறுத்தி , சத்திரக்குடி அருகே போகலூர் டோல்கேட்டில் பாட்டாளி மக்கள் கட்சியினர் டயர் பொருத்திய மாட்டு வண்டி பயணம் மேற்கொண்டனர். இராமநாதபுரம் மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சை.அக்கிம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஜீவா. மாவட்ட பொருளாளர் ஆயிஷா, மாநில மாணவரணி சங்க செயலாளர் அம்ஜத் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் உள்ளிட்ட கட்சி பொறுப்பாளர்கள் போகலூர் டோல்கேட்டில் டயர் பொருத்திய மாட்டு வண்டியில  கட்டணமின்றி பயணம் மேற்கொண்டனர். மாட்டுவண்டி மீதமர்ந்து கோஷம் எழுப்பி விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர். போகலூர் ஒன்றியத்தில் உள்ள இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுங்கச்சாவடிகளில் நடத்தப்படும் கொள்ளைகளில் பொது மக்கள் தப்பித்து கொள்ள மாட்டுவண்டி, குதிரை வண்டி பயணமே சிறந்தது என பொதுமக்களுக்கு உணர்த்தும் விதமாக விழிப்புணர்வு மாட்டுவண்டிப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. கீழக்கரை நகர செயலாளர் லோகநாதன், கடலாடி ஒன்றிய செயலாளர் இருளாண்டி, கடலாடி ஒன்றிய தலைவர் காளிமுத்து , கீழக்கரை நகர தலைவர் அப்துல் லத்தீப், ராமநாதபுரம் நகர பொறுப்பாளர் தாரிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image