Home செய்திகள்கீழக்கரை செய்திகள் அபாகஸ் போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் கீழக்கரை பள்ளி மாணவ, மாணவிகள்..

அபாகஸ் போட்டிகளில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் கீழக்கரை பள்ளி மாணவ, மாணவிகள்..

by ஆசிரியர்

இன்று 22.01.2020 இராமநாதபுரம் AVMS மெட்ரிகுலேசன் பள்ளியில் நடந்த மாவட்ட அளவிலான 18 பள்ளிகள் பங்கேற்ற ABACUS போட்டியில் ஹமீதியா பள்ளி சார்ந்த 52 மாணவர்கள் கலந்துகொண்டனர்.

அதில் முதல் வகுப்பில் A. HASIM ABDUL QADIR முதல் இடத்தையும், N. SAMMEEM AHAMED இரண்டாம் இடம், S.MUTHU SAHINA மற்றும் S.NAVANITHA மூன்றாம் இடத்தையும், இரண்டாம் வகுப்பில் R.RAJA HARSHAN முதல் இடம், SHIVANI மற்றும் AL SHIFA – இரண்டாம் இடம், S.HANAFA MARIYAM – மூன்றாம் இடத்தையும, மூன்றாம் வகுப்பில் C.HARISH PRIYAN-முதல் இடம், SRI DEVI -இரண்டாம் இடம், MITHAN PRIYAN மற்றும் AL AFRA BEEVI மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

நான்காம் வகுப்பில் KIRUTHIGA , MAHA SRI- முதல் இடம், R.NASRANA, AMINATH FAHINA இரண்டாம் இடம், VISHNU KUMARI, ANANYA* -மூன்றாம் இடத்தையும், ஐந்தாம் வகுப்பில் MOHAMED NAFIL-முதல் இடம், MUKILA PANDI PRIYA, A. SUHAINA இரண்டாம் இடம் R.ANU SRI -மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். ஹமீதியா பள்ளி அனைத்து பள்ளிகளிலும் தொடக்க நிலையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது. அதே போல் இப்போட்டியில் பங்குபெற்ற பள்ளிகளில் ஹமீதியா பள்ளி தான் தமிழ் வழி பயிற்றுவிக்கும் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல் கீழக்கரை பேர்ல் ஆங்கில வழி பள்ளிக்கூடத்தில் பயிலும் மாணவி ஆதிலா என்ற மாணவி தொடர்ந்து அபாகஸ் பேட்டிகளில் தொடந்து சாதனை படைத்து வருகின்றார்.

இவர் அபாகஸ் போட்டியில் கல்கத்தா மற்றும் சென்னையில் நடைபெற்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று தான் படிக்கும் பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகிறார். இந்த மாவட்ட அளவில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற அபாகஸ் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

இவர் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்புக்கழகத்தின் செயற்குழு உறுப்பினர் தீன் முஹம்மது இஸ்மாயிலின் மகள் ஆவார். இவர் தகப்பனார் நமது சிறப்பு நிருபரிடம் அளித்த பேட்டியில் “விரைவில் மக்கள் நல பாதுகாப்புக்கழகம் சார்பாக அபாகஸ் மற்றும் உயர் படிப்புக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி அனைத்து பள்ளிகளையும் ஒன்றினைத்து விரைவில் நடத்த ஏற்பாடு செய்து வருகின்றோம்” என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!