தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் ஒன்றியம் துப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா.!

தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் ஒன்றியம் துப்பாஸ்பட்டி கிராமத்தில் சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா.!

திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் தலைமையேற்று நடத்தி வரும் PEACE FOR CHILDREN குழந்தைகள் நல அமைப்பின் முதலாம் ஆண்டு சமத்துவப் பொங்கல் மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா தூத்துக்குடி துப்பாஸ்பட்டியில் அன்பாலயம் அறக்கட்டளையால் நடத்தப்பட்டது.

எழுத்தாளரும், கவிஞரும், சமூக செயற்பாட்டாளருமான, PFC தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் திருமதி. ஹேமா முரளிதரன் (கவிதாயினி.செந்தாமரைக்கொடி) அவர்கள் தலைமையில்,

மாவட்ட இணைச்செயலாளர் திரு. கல்யாண சுந்தரம் அவர்களின் முன்னிலையில், சமத்துவப் பொங்கல், மற்றும் பாரம்பரிய விளையாட்டு விழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்ட விழாவில்,

சிறுவர், சிறுமியர், பெண்களுக்கு என்று தனித்தனியே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளை துப்பாஸ்பட்டி சமூக செயற்பாட்டாளர் பழனி முருகன் அவர்கள் மற்றும் PFC தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர் திரு. அனீஸ் மெல்வின் அவர்கள் ஒருங்கிணைத்து நடத்தினார்கள்.

கோலப்போட்டி, மாறுவேட போட்டி என அனைத்து விதமான கிராமிய, தமிழ்ப் பாரம்பரிய போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் அன்பாலயம் அறக்கட்டளை மூலம் பரிசுகள் வழங்கப்பட்டது.

PFC தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஹேமாமுரளிதரன் (கவிதாயினி. செந்தாமரைக்கொடி) தலைமையேற்று வெற்றி பெற்றோருக்கு தன் பொற்கரங்களால் பரிசுகளை வழங்கி வாழ்த்தினார்கள். முன்னதாக பழனிமுருகன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

மாவட்டச் செயலாளர் செந்தாமரைக்கொடி தனது சிறப்புரையில்,

குழந்தைகளின் நலனுக்காகவே PEACE FOR CHILDREN அமைப்பு இருக்கிறது. எந்தவொரு பிரச்சனையெனினும் தாய்க்கோழி போல ஓடிவந்து அணைத்துக் கொள்ள PFC இருக்கிறது. தயங்காது அழையுங்கள்.

குழந்தைகளின் பொறுமையும் சாதிக்கத் துடிக்கும் முனைப்பும் ஆனந்தம் தருகிறது. இன்றைய ஆனந்தம் இனி குறையவே கூடாது.

இந்தியாவின் இதயமாக இருக்கும் கிராமங்களில் இப்போதெல்லாம் எல்லாமும் உடனடியாக வந்து சேருமளவு பல்வேறு வசதிகள் தற்காலத்தில் பெருகிவிட்டது. முயற்சிகள் நிறைவாக இருந்தாலும் பயிற்சிக்கான வாய்ப்பு மட்டுமே குறைவாக இருக்கிறது.

வரும் காலங்களில் நமது ஒற்றுமையான முயற்சிகளால் இந்த நிலையில் மாற்றம் காண்போம்.

தற்போதைய வசதிகளை தவறாமல் உபயோகித்து வாழ்வில் சாதனையாளராக வாழ்த்துகிறேன். என்று பேசினார்.

இவ்விழாவில் மாவட்டத் துணைச்செயலாளர்கள் மேகலா பழனி முருகன், திருமதி. ரெங்கநாயகி, துப்பாஸ்பட்டி கிராம ஊர்ப் பெரியவர்கள், காவல்துறை நண்பர்கள், ஏராளமான குழந்தைகளும், ஊர்ப் பொது மக்களும் திரளாக வந்து கலந்து கொண்டு, இவ்வாறான பெருமைமிகு விழாவிற்கு தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்து, விழாவினை சிறப்பித்தனர்.

விழா முடிவில் PFC தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர் திரு. அனீஸ் மெல்வின் அனைவருக்கும் நன்றி கூறினார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..