மதுரை மாநகரில் 31- வது சாலை பாதுகாப்பு வார விழா – 2020.!

இன்று (21.01.2020) மதுரை மாநகரில் 31 வது சாலை பாதுகாப்பு வாரவிழாவின் இரண்டாவது நாளான இன்று மதுரை மாவட்ட ஆட்சி தலைவர் திரு. வினய் IAS., அவர்கள் தலைமையில் நடைபெற்ற தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிவது குறித்த விழிப்புணர்வு நடைபயண பேரணியை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. செல்லூர் கே.ராஜூ அவர்கள் தெப்பக்குளத்தில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் காவல் துணை ஆணையர் (ச&ஒ) திரு.கார்த்திக் இ.கா.ப, காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) திரு.சுகுமார் மற்றும் போக்குவரத்து காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் ஏராளமான பொதுமக்களும் (மொத்தம் 1150 நபர்கள்) கலந்து கொண்டனர். மேலும் மதுரை மாநகரில் இன்று தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணிந்து வந்த அனைத்து நபர்களுக்கும் ரோஜாப்பூ மற்றும் சாக்லேட் கொடுத்தும் பொதுமக்களை உற்சாகப்படுத்தினர். தலைக்கவசம் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் சாலையில் பயணம் செய்தவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image