ஜனவரி 24-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.!

CAA, NPR,NRC, விவகாரம் தொடர்பாக ஜனவரி 24-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.!

இதுகுறித்து, திமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், குடியுரிமைத் திருத்தச் சட்டம்,  தேசிய மக்கள் தொகைப் பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு,  தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 24/01/2020 ( காலை 10 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயத்தில், அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகைப் பதிவேட்டுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேசமயம், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள மற்றும் பஞ்சாப் சட்டப்பேரவைகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இவ்விவகாரங்கள் தொடர்பாக திமுக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..