மக்கள் வசிக்கும் பகுதிகளில் குப்பைகள் எரிக்கும் அவலம்: புகை மண்டலமாக காட்சியளிக்கும் பிரதான வீதிகள்.!

தொடர்ந்து குப்பையை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதுடன் மூச்சுத்திணறலும் ஏற்படுவதாக  பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பலமுறை சொல்லியும் தொடர்ந்து குப்பைகளை எரிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் முதல் அதிகாரிகள் வரை இதே அலட்சிய போக்கையே கையாண்டு வருகின்றனர்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு எல்லிஸ் நகர் 70 அடி சாலையில் பழைய பிஎஸ்என்எல் அலுவலகம் நுழைவாயிலில் மற்றும் எல்லீஸ்நகர் 70 அடி சாலையில் பல இடங்களில் தினசரி மழைநீர் வடிகால் வாய்க்காலில் குப்பைகளை எரிப்பதால் மாசு ஏற்படுகிறது பலமுறை சொல்லியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் குப்பைகள் பிளாஸ்டிக் கழிவுகளை எரிப்பதால் மூச்சுத்திணறல் ஏற்படுவதாகவும் மேலும் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறுவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். உச்சநீதிமன்றம் ஏற்கனவே குப்பைகளை எரிக்கக் கூடாது என கண்டிப்பான முறையில் உத்தரவுப் பிறப்பித்த நிலையில் தொடர்ந்து இது போன்ற நிலை நீடித்து வருகிறது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது செய்தியாளர்.

வி. காளமேகம், மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..