Home செய்திகள் உசிலம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்களில் மர்மநபர் தீ வைத்ததால் தீவிபத்து.

உசிலம்பட்டியில் நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்களில் மர்மநபர் தீ வைத்ததால் தீவிபத்து.

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை மட்கும் குப்பை, மட்காத குப்பை என தரம் பிரிப்பதற்காக உசிலம்பட்டி நகராட்சி சார்பில் உத்தப்பநாயக்கணூரில் குப்பைக்கிடங்கு அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த குப்பைகிடங்களில் காலை 10 மணியளவில் மர்ம நபர்கள் தீவைத்துச் சென்றதால் தீ பற்றி ஆரம்பித்து மளமளவென எரிய ஆரம்பித்தது.தீ கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்ததால் உடனடியாக அருகிலிருப்பவர்கள் தீயணைப்புத் துறையினருக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால் வண்டியில் தண்ணீர் தீர்ந்ததால் தண்ணீர் நிரப்ப உசிலம்பட்டிக்கு வந்தனர்.அதன்பின்பும் தீ தொடர்ந்து எரிய ஆரம்பித்ததால் நகராட்சி ஊழியர்கள் நகராட்சி லாரியின் மூலம் தண்ணீர் கொண்டுவந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.சுமார் 5 மணிநேரத்திற்கும் மேலாக தீ எரிந்து வருவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.மேலும் உசிலம்பட்டி திண்டுக்கல் சாலையில் புகை மண்டலமாக காட்சியளித்து வாகனங்கள் செல்ல முடியாமல் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். உசிலம்பட்டி நகராட்சி நிர்வாகம் மக்கும் குப்பை மக்காத குப்பை எனத் தரம் பிரித்து ஒதுக்காமல் மலை போல் குப்பைகளை குவிய விட்டதே இந்த தீ விபத்துக்கு காரணம் என குற்றம் சாட்டினர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!