Home செய்திகள் பரமக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார்.

பரமக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 போட்டித் தேர்வுக்கு இலவச பயிற்சி மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார்.

by mohan

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஆயிரவைசிய கல்வியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-2 போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் இன்று (19.01.2020) துவக்கி வைத்தார்.அவர பேசியதாவது:தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் இளைஞர்கள் நலனுக்காக பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகிறது. அதேபோல, இளைஞர்கள் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயார் செய்து கொள்ள இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில், பரமக்குடியில்  , உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர்வதை இலட்சியமாகக் கொண்டு பயிற்சி செய்யும் இளைஞர்களுக்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமைந்துள்ளது.தேர்வு எழுதுபவர்களின் தனித்திறன், நிர்வாகத் திறன், சமயோஜித செயல்பாடு போன்ற பண்புகளை திறன் அறிவதற்காகவே போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. எனவே, இளைஞர்கள் தயக்க சிந்தனையை தவிர்த்து தன்னம்பிக்கையுடன் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டும். இளைஞர்கள் கவன சிதறலின்றி ஒரு மனதாக தங்களை தயார் செய்துகொள்ளும் பட்சத்தில் குடிமைப்பணித் தேர்வு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு உள்ளிட்ட எத்தகைய தேர்வானாலும் எளிதில் தேர்ச்சி பெறலாம் என பேசினார். முன்னதாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் நடத்தப்பட்ட இலவச பயிற்சி வகுப்பில் பங்கேற்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் காவல்துணை கண்காணிப்பாளர் நிலை பணிக்கு தேர்ச்சி பெற்ற ராஜபிருந்தா, குரூப்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற சிவரஞ்சனி ஆகியோர் மாவட்ட ஆட்சித் தலைவர் வீராகவ ராவை சந்தித்து வாழ்த்து பெற்று, இளைஞர்களுக்கு ஊக்க உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் என்.சதன் பிரபாகர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்.ஏ.முனியசாமி, பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் து.தங்கவேல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சி.மதுக்குமார், வேலைவாய்ப்பு அலுவலர் (தொ.வா) டி.அருண்நேரு, ஆயிர வைசிய கல்வியியல் கல்லூரி தலைவர் .என்.போஸ் உட்பட அரசு அலுவலர்கள், இளைஞர்கள் பலர் பங்கேற்றனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!