தொடரும் சாலை விபத்து. போக்குவரத்து காவலர் நியமிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை..

மதுரை மாவட்டம் பைபாஸ் சாலை பழங்காலத்தில் இருந்து காளவாசல் செல்லும் மேம்பாலத்தில் இருந்து இறங்கும்போது மீறும் பொழுது அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. மேலும் சர்வீஸ் ரோடு இல்லாத காரணத்தினாலும் பாலம் மிகுந்த சேதம் அடைந்த காரணத்தாலும் போடி லயன் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு சர்வீஸ் சாலை முற்றிலும் காம்பவுண்ட் சுவரால் எழுப்பி அடைக்கப்பட்டு உள்ளதால் அணைத்து அனைத்து வாகனங்களும் பாலத்தின் மேலே செல்லு சென்று வர வேண்டிய நிலை உள்ளது. இதனால் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்படுகிறது. இங்கு ஒரு தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது .இந்த பள்ளி காலையும் மாலையும் பள்ளி வரும் போகும் நேரங்களில் போக்குவரத்து கடுமையான நெரிசல் ஏற்படுகிறது. மேலும் தொடர் விபத்துகளும் ஏற்படுகிறது. அது போன்று  காலை சுமார் பதினொரு மணி அளவில் இருசக்கர வாகனம் 2 நேருக்கு நேர் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுமி மற்றும் இருவர் காயம் ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயமின்றி தப்பினார். மேலும் பின்னால் எந்த ஒரு வாகனம் வராததால் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் சப்பியதால் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர் இது தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதால் இந்த இடத்தில் ஒரு போக்குவரத்து காவலர்களை நியமிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர். பள்ளி காலங்களில் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு காவல் துறையும் தேசிய நெடுஞ்சாலை துறையில் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..