கண்டன பொதுக் கூட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள CAA, NRC, NPR போன்ற சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் கண்டன பொதுக் கூட்டம் நடைபெற்றது.இப்பொதுக் கூட்டத்திற்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட செயலாளர் ராஜாமுகமது தலைமை தாங்கினார். மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில பொதுச் செயலாளர் முகமது சித்திக் கண்டன உரை நிகழ்த்தினார்.

மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது, SDPI கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார், ஜமாத்துல் உலமா சபை மாவட்ட செயலளார் நிஜாமுதீன் யூசுபி, இந்திய தேசிய லீக் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் இப்ராஹிம் உஸ்மானி ,இந்திய தவ்ஹீத் ஜமாஅத் இந்திய உலமா முன்னனி தலைவர் ஷாகுல் ஹமீது பாக்கவி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் ப.நாகரத்தினம் , வி.சி.கே தேனி மாவட்டம் பொருள்ளார் J. ரபீக்பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழ்வாணன் , அய்யா தர்மயுக வழிப் பேரவை நிறுவனர் (ம) தலைவர் பாலமுருகன்,தென் சென்னை மாவட்ட செயலாலர் முஹம்மது யூசுப் ஆகியோர் சிறப்புரையாற்ற, நகர செயலாளர் (இந்திய தவ்ஹீத் ஜமாஅத்) முபாரக் அலி நன்றி கூறினார்.

சாதிக் பாட்சா நிருபர் தேனி மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image