ராமநாதபுரத்தில் சைக்கிள் தின விழிப்புணர்வு பேரணி சைக்கிள் தினத்தையொட்டி, ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

இந்திய அரசு நேரு யுவ கேந்திரா சங்கதன், பிட் இந்தியா ஆகியன சார்பில் தொருவளூர்- நயினார்கோவில் சந்திப்பு சாலையில் தொடங்கிய விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீ. கேசவதாசன், ராமநாதபுரம் தாசில்தார் முருகவேல், மாவட்ட இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் நோமன் அக்ரம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் (
ராமநாதபுரம்)ஊராட்சி மன்றத் தலைவர்கள் எஸ்.பஜூருதீன் (தொருவளூர்), தெய்வநாதன் (சூரங்கோட்டை), நாகரத்தினம் (காரேந்தல்) ஊராட்சி செயலர்கள் முனியசாமி (தொருவளூர்), பாக்யநாதன் (சூரன்கோட்டை), ஆனந்தி (பேராவூர்), விமல்ராஜ் (சக்கரக்கோட்டை) மற்றும் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..