ராமநாதபுரத்தில் பொங்கல் பண்டிகை கால்பந்து போட்டி

இராமநாதபுரம் கால்பந்து சங்கம், தமிழ்நாடு உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சங்கம் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி மாவட்ட அளவிலான 6 ஆம் கால்பந்து போட்டி இராமநாதபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது.கால்பந்து சங்க பொறுப்பாளர்கள் ராஜா, தியாகராஜன், ஹரிகிருஷ்ணன், தஞ்சி சுரேஷ், முத்துராஜா, தமிழ்நாடு உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் சங்க ராமநாதபுரம் செயலாளர் எம்.ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜன், பிரபாகரன், சிவக்குமார், ஜாகீர் உசேன், பாரதி, ராஜ்குமார் ஆகியேரர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இரண்டு நாள் நடைபெறும் இப்போட்டியில் மண்டபம் முகாம், கீழக்கரை, பெரியபட்டணம், அழகன்குளம், பனைக்குளம், பெருங்கு|ளம், மேலக்கோட்டை , வண்ணாங்குண்டு, முதுனாள், சித்தார் கோட்டை அணிகள் உள்ளிட்ட 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இதன் இறுதிப்போட்டி, நாளை(19.01.2020) மாலை நடைபெறவுள்ளது.

To Download Keelainews Android Application – Click on the Image

பிப்ரவரி மாத இதழ்..

பிப்ரவரி மாத இதழ்..