உழவர் திருநாளை முன்னிட்டு மக்கள் பாதை சார்பாக மரக்கன்றுகள் நடும் விழா

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக உழவர் திருநாளை முன்னிட்டு இராஜசிங்கமங்கலத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடைபெற்றது.இராஜசிங்கமங்கலம் சேக் தாவூது தெருக்களில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் தலைமை தாங்கினார்.இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இஸ்லாமிக் சோசியல் சர்வீஸ் நிர்வாக குழு உறுப்பினர் பகுர்தீன், தீபம் இந்தியா அறக்கட்டளை நிறுவனர் மதிவாணன், மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மரக்கன்றுகள் நடுவதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் மரக்கன்றுகள் நடும் பணியின் போது பொதுமக்களால் குளிர்பானம் நமக்கு வழங்கப்பட்டது.

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image