மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்ராக் முறையில் இருந்தும் பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் தேக்கம்.

மதுரை மாவட்டம் கப்பலூர் சுங்கச்சாவடியில் பாஸ்ட்ராக் அமல்படுத்தி விரைவாக செல்லும் என பாதைகள் அமைக்கப்பட்டு இருந்தது. அப்படி அமைக்கப்பட்டு இருந்தாலும் அந்த வழியிலும் வாகனங்கள் இருபதிலிருந்து முப்பது நிமிடங்கள் வரை காத்திருந்து செல்லவேண்டிய அவலங்கள் இருப்பதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் பொங்கல் விடுமுறை முடிந்து ஊருக்கு செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளதாக வாகன ஓட்டுனர்கள் வாகன உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர் .இதனால் பல கிலோ மீட்டருக்கு வாகனம் அணிவித்து இருப்பதாகவும் மேலும் அவசர வழியை எந்தவித முன்னேற்பாடும் செய்யவில்லை எனவும்  ஏதேனும் கேட்டால் குண்டர்களை வைத்து தாக்குவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இவர்கள் வட மாநிலத்தவர்கள் மொழி தெரியாத நபர்களை வேலைக்கு அமைத்துவிட்டால் வாகன ஓட்டுநர்களுக்கும் சுங்கச்சாவடி ஊழியர் களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுகிறது . வாகனங்கள் விரைவாக செல்ல தேசிய நெடுஞ்சாலைத்துறை விழாக்காலங்களில் மற்றும் விடுமுறை நாட்களில் பாஸ்ராக் முறையை விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டுநர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image